ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளது இறுதியாக பாஜக தலையிட்டால் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போன்ற வசம் அதிமுக வந்துள்ளது. ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் இனை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் அதிமுகவில் வழிநடத்தி உள்ளனர். இதற்கு இடையே இவர்கள் இருவருக்குள் பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இது வெளிப்படையான மோதலாக வெடித்ததால் அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்ட எடப்பாடி பொதுக்குழுவை கூட்டியுள்ளார்.
அதில் தன்னை இடைக்கால பொது செயலாளராக அறிவிக்கவும் செய்தார். இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி கட்சியை விட்டு நீக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் அதிமுகவிற்கு உரிமை கோரி சட்ட போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து இருக்கின்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையில் ஓபிஎஸ் பின்னடைவை சந்தித்தாலும் அடுத்தடுத்த விசாரணையில் ஓபிஎஸ் க்கு சாதகமாக மாறி இருக்கிறது. அதனால் நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வரவேண்டும் என்பதற்காக அவரது ஆதரவாளர்கள் கோவில்களில் அபிஷேகம், சிறப்பு பூஜை போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் ஒரு பகுதியாக தனது நெருங்கிய ஆதரவாளர்களின் ஆலோசனைப்படி கேரளா சென்ற இபிஎஸ் மலையாள மாந்திரீகர்களை வைத்து மிருகங்களை பலியிட்டு பூஜைகள் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து வழக்கு தீர்ப்பு கண்டிப்பாக தங்களுக்கு சாதகமாகவே வரும் என ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பு மிகுந்த நம்பிக்கையோடு இருந்து கொண்டிருக்கின்றது. இந்த சூழலில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையேயான வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த 17ஆம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளார் அதில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது. மேலும் கட்சியின் விதிப்படி பொதுசெயலாளர் ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் போன்றோர் இணைந்து தான் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியும். அதனால் அவை தலைவர் அழைப்பு விடுக்க முடியாது அவர் பொதுக்குழு கூட்டத்தை தான் நடத்த முடியும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து நிறைவேற்றிய தீர்மானம் ரத்து செய்யப்படுகின்றது.
அதேபோல 23ஆம் தேதிக்கு முன் கட்சியில் என்ன நிலை இருந்ததோ அதே நிலை தான் தற்போது நீட்டிக்க வேண்டும் என நீதிபதியின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக இபிஎஸ் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த சூழலில் இந்த தீர்ப்பு வருவதற்காகவா கேரளாவிற்கு போய் கோடிகளை கொட்டி பூஜைகளை செய்தோம் என ஆவேச கேள்வி எழுப்பிக் கொண்டும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாக இருப்பது நம்பத் தகுந்த வட்டாரங்கள் கிசு கிசுத்து வருகின்றது.