Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் அருகே கடத்த முயன்ற 2000 டன் வெள்ளை கற்கள்”…. பறிமுதல் செய்த கனிம வளத்துறை அதிகாரிகள்….!!!!!!

சேலம் அருகே 2000 டன் வெள்ளை கற்களை கடத்த முயன்ற நிலையில் கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.

சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர், வெள்ளக்கல்பட்டி, டால்மியா போர்டு உள்ளிட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான வெள்ளைகற்கள் வெட்டி எடுக்கும் தொழிற்சாலை இயங்கி வந்த நிலையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றது என பொதுமக்கள் குற்றம் சாட்டியதை தொடர்ந்து வெள்ளை கற்கள் வெட்டி எடுக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனால் வெள்ளை கற்கள் வெட்டி எடுப்பது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்பகுதியில் இரவு நேரங்களில் வெள்ளை கற்கள் வெட்டி எடுத்து கடத்திச் சென்று விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த சேலம் கனிமவள உதவி இயக்குனர் பிரசாந்த் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தியதில் மலைப்பகுதியில் வெட்டி 2000 டன் வெள்ளை கற்கள் குவித்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். இதுகுறித்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது, மலைப்பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் கண்காணித்து வருகின்றோம். மேலும் கடத்துவதற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த வெள்ளைக்கற்களை பரிமுதல் செய்துள்ளோம். மேலும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |