தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் சினிமா மட்டும் அல்லாமல் கோலிவுட் வட்டாரத்திலும் கலக்கி வருகிறார். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான தி கிரே மேன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. தற்போது தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இந்தத் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிடப்பட்டது.
இப்படத்தில் தமிழக உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார். மேலும் இப்படத்தில் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் நடிகர் பிரகாஷ்ராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இப்ப படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓ பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த திரைப்படம் முதல் நாள் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.அதாவது பணத்தின் வசூல் ஒட்டுமொத்தமாக 9.50 கோடி என்றும் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஆறு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.