குழித்துறை நகராட்சி பகுதியில் இருக்கும் 7 கடைகளில் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில் தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் நகராட்சி பணியில் இருக்கும் தேங்காப்பட்டணம், சாலை மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் இருக்கும் கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள்.
இதில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதற்காக 7 கடைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த கடைகளில் இருந்து மொத்தம் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏழு கடைகளுக்கும் மொத்தம் ரூபாய் 5,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டன.