Categories
தேசிய செய்திகள்

300 கோடி சொத்து…! ஒரு நிமிடம் திகைத்துப் போன அதிகாரிகள்… வசமாக சிக்கிய போக்குவரத்து அதிகாரி…!!!!!

மத்திய பிரதேசத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அதிகாரியாக சந்தோஷ் பால் என்பவர் பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி ரேகா அதே அலுவலகத்தில் கிளர்க்காக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பொருளாதார குற்றப்பிரிவினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அரசு அதிகாரியின் வீட்டிற்குள் இருக்கும் ஆடம்பரத்தை கண்டு சோதனை போட சென்ற அதிகாரிகளை ஒரு நிமிடம் திகைத்துப் போய்விட்டனர் அதாவது சந்தோஷ் பால் வீட்டில் நடத்தப்பட்ட இந்த சோதனை தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவரது வீட்டில் இருந்து 16 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த நகைகள், சொகுசு கார்கள் போன்றவை மீட்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் அவருக்கு மேலும் 4 வீடுகள் மற்றும் ஒரு பண்ணை வீடு இருப்பதும் இந்த சோதனையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் அது தொடர்பான ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி சென்றுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மொத்தம் 300 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் மீட்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த தம்பதி தங்கள் வருமானத்தை காட்டிலும் 650 சதவீதம் அதிகமான சொத்துக்களை சேர்த்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அனைத்தையும் போலீசார் கைப்பற்றி சென்றுள்ளனர். இந்த நிலையில் இவர் கடந்த நான்கு வருடங்களாகத்தான் பணியாற்றி வருகின்றார். ஆனால் இவரது குடும்பத்தினர் பலரும் இங்கு பணிபுரிகின்றார்கள். கடந்த வருடம் இவர் மீது ஆட்டோ டிரைவர்கள் அளித்த புகாரின் அடிப்படையிலே வழக்கு பதிவு செய்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. 10 ஆயிரம் சதுர அடியில் உள்ள அவரது வீட்டில் ஒரு நீச்சல் குளம், ஜக்குஸி மற்றும் மினி பார் மற்றும் சிறிய தியேட்டர் ஒன்றும் இருந்திருக்கின்றது வீடு அரண்மனை போல இருக்கிறது.

Categories

Tech |