Categories
இந்திய சினிமா சினிமா

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட “ஷியாம் சிங்கா ராய்”….. வெளியான சூப்பர் தகவல்….!!!!

நடிகர் நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”. நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்திருந்த இப்படத்தை, இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கினார். சாய்பல்லவி, கிரித்தி ஷெட்டி, ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறந்த காலகட்டத் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, பாரம்பரிய கலாச்சார நடனம் ஆகிய மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |