இலங்கைக்கு கடன் கொடுப்பதற்கு ஐஎம்எப் முடிவு செய்துள்ளது.
இலங்கையில் அன்னிய செலவாணி பற்றாக்குறையினால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் நாட்டு அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை அரசு ஐஎம்எப் இடமிருந்து கடன் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக நிதி மந்திரி அலி சாப்ரி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அமெரிக்காவுக்கு சென்று ஐஎம்எப் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பிறகு ஐஎம்எப் நிபந்தனைகளுக்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டதால் தற்போது கடன் கொடுப்பதற்கு ஐஎம்எப் முடிவு செய்துள்ளது. மேலும் கடன் கொடுப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்குவதற்காக அடுத்த மாதம் ஐஎம்எப் அதிகாரிகள் இலங்கைக்கு வர இருக்கின்றனர். இந்த தகவலை மத்திய வங்கி கவர்னர் நந்தலால் வீரசிங்கே தெரிவித்துள்ளார்.