தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான படங்களை இயக்கி பெயர் போனவர் சங்கர். இவரின் இளைய மகள் டாக்டரா அதிதி நடிகையாக நடித்து வருகிறார். இவர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடித்திருக்கும் ‘விருமன்’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் சூர்யா தயாரிப்பில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகராக அதிதி அறிமுகமாகி உள்ளார். விருமன் படத்தில் அதிதியின் நடிப்பு மற்றும் நடனத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். முதல் படத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பலரும் பாராட்டி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து அதிதிஅடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதனையடுத்து ஷங்கரின் மகள் என்பதாலே அவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகை ஆத்மிகா மறைமுகமாக இது குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இந்த விமர்சனங்களுக்கு அதிதி பதிலடி கொடுத்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறியது, “என் அப்பாவால் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்திருக்கலாமா. ஆனால் திறமை இல்லாவிட்டால் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காது, ரசிகர்கள் ஆதரிக்க மாட்டார்கள். இந்த துறையில் நிலைத்து நிற்க்க முடியாது. வாரிசு அந்தஸ்து இல்லை மாறாக திறமை தான் கைகொடுக்கும்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் இவரின் இந்த கருத்துக்கு பலரின் ஆதரவு கிடைத்து வருகிறது.