செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நான் ஏற்கனவே சொன்னது போல் இது துக்ளக் அரசங்கம். எப்படிப்பட்ட ஒரு அரசாங்கம், அதிகாரத்தை வைத்துக்கொண்டு, அந்த அதிகாரத்தின் மூலமாக போதையை அடக்கலாம், ஆனால் ஒரு எம்எல்ஏ விற்கு முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார், இது எந்த மாநிலத்திலாவது நடக்குமா? ஒரு முதலமைச்சர் என்ன செய்ய வேண்டும். காவல்துறையை முடக்கிவிட்டு, அந்த போதை பொருளை எல்லாம் வைத்திருக்கிறவர்களை, கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதை செய்வதை விட்டுவிட்டு, அதை செய்யாமல்., எம்எல்ஏ விற்கு கடிதம் எழுதினால், அப்போது ஒன்னு சொல்லாமல் சொல்கிறார். திமுக கட்சி எம்எல்ஏக்கள் எல்லாம் கஞ்சா, போதை பொருள் வைப்பவர்களாக இருக்கிறார்களா? அப்படி என்று தமிழ்நாட்டு மக்கள் இன்றைக்கு சந்தேகப்படுகிறார்கள். வீட்டில் அரசியல், வெளியில் அரசியல், குழாயடி சண்டையில் அரசியல், அதேபோல தெருவுக்கு தெரு, நாட்டிற்கு நாடு எல்லா இடத்திலும் அரசியல் இல்லாத உலகமே கிடையாது. அதனால் அரசியல் அவர் பேசினோம் என்று சொல்கிறார்.
என்ன மாதிரி பேசினார் என்று அவர்தான் பதில் சொல்ல வேண்டும். பிறந்ததிலிருந்து சுடுகாடு செல்கின்ற வரைக்கும் அரசியல் தான் எல்லாமே, அரசியல் இல்லாத உலகமே கிடையாது, இதுதான் நான் பொதுவாக சொல்ல முடியும். அதை தாண்டி அவர் எந்த மாதிரியான அரசியல் பேசினார் என்பதை ரஜினிகாந்தை சந்திக்கும் போது அன்பாக கேளுங்கள், அவரே சொல்லுவார் என தெரிவித்தார்.