Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“ஷ்ரேயஸ் ஐயருடன் சஹால் மனைவி”….. விவாகரத்தா?….. சூர்ய குமாரின் கிண்டல் பதிவால் வெடித்த சர்ச்சை…. முற்றுப்புள்ளி வைத்த சஹால்….. அப்படி என்ன நடந்தது?

சூர்யகுமார் யாதவ் பதிவிட்ட புகைப்படத்தால் தனஸ்ரீ விவாகரத்து செய்யப்போவதாக வதந்தி பரவிய நிலையில் சஹால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் யூசுவேந்திர சஹால் சமீப காலமாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு சவால் விடும் வகையில் அவரது பந்துவீச்சு சிறப்பாகவே இருக்கிறது. முன்னாள் பந்துவீச்சாளர் அணில் கும்ளேவிற்கு பின்னர் லெக் ஸ்பின்னர் ஆக நிலையான இடத்தை பிடித்துள்ள சஹால் 2016 க்கு பின் முதன்மை பந்துவீச்சாளராக இந்திய அணிக்கு விளையாடி வருகிறார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக தனது பயணத்தை தொடங்கிய அவர் பெங்களூர் அணிக்கு சென்றபின் சிறப்பாக பந்துவீசி 2016 ஆம் ஆண்டு இந்திய அணியிலும் அறிமுகமானார். அதன் பின் கடந்த வருடம் பார்மை இழந்ததன் காரணமாக டி20 உலக கோப்பையில் தனது இடத்தை பறி கொடுத்தார். இதனால் பெங்களூர் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட அவர் ராஜஸ்தான் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு அந்த அணிக்காக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது உட்பட சிறப்பாக பந்துவீசி ஊதா தொப்பியை கைப்பற்றி நல்ல ஃபார்முக்கு மறுபடியும் வந்துவிட்டார். இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் இவர் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் விளையாட இருக்கிறார்.

கிரிக்கெட் களத்தில் எப்போதும் ஜாலியாகவே காணப்படும் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தனஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இருவரும் எப்போதுமே சமூகவலை தளத்தில் ஆக்டிவாக இருப்பார்கள். தனஸ்ரீ கிரிக்கெட் ஸ்டேடியங்களில் அடிக்கடி காணப்படுவார், சஹால் கிரிக்கெட் ஆடும்போது பல சந்தர்ப்பங்களில் தனது கணவரை உற்சாகப்படுத்துவார்.

அதுமட்டுமின்றி, அவர் பல்வேறு கிரிக்கெட் நட்சத்திரங்களுடன் நடனமாடும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிடுகிறார். இருப்பினும், தற்போது சாஹலுக்கும் தனஸ்ரீக்கும் இடையே இருந்த விஷயங்கள் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிகிறது.

 

சூர்யகுமார் யாதவ் பதிவால் சர்ச்சை :

இந்நிலையில் சமீபத்தில் சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை வெளியிட்ட போது வதந்திகள் ஆரம்பித்தன. ஏனென்றால் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யா குமார் யாதவ் சில நாட்களுக்கு முன் தனது மனைவி தேவிஷா ஷெட்டி மற்றும் சஹால் மனைவி தனஸ்ரீ, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரிடம் சேர்ந்து நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதில் சூர்யகுமார் யாதவ் தனது மனைவியின் கையை பிடித்து நெருக்கமாக நின்றிருந்தார். மறுபக்கம் ஷ்ரேயஸ் ஐயர் பக்கத்தில் தனஸ்ரீ நின்றிருந்தார்.. அவரை தொடவில்லை என்றாலும் கூட அவரை கிட்டத்தட்ட உரசியது  போலவே சிரித்த முகத்துடன் சஹால் மனைவி நின்றுள்ளார். இதில் வில்லத்தனமாக மாறியது என்னவென்றால், சூர்யகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்திற்கு தலைப்பாக, “மன்னிக்கவும் யுஸ்வேந்திர சாஹல், நாங்கள் உங்களை மிஸ் செய்யவில்லை” என்று இரட்டை அர்த்தத்துடன் பதிவிட்டார்..

 

புரளியை கிளப்பிய நெட்டிசன்கள் :

இந்த பதிவுதான் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்ப வைத்துள்ளது. ஏனென்றால் ஷ்ரேயஸ் ஐயருக்கும், தனஸ்ரீ க்கும்  தொடர்பு இருப்பது போலவே தேவையற்ற வதந்திகளை பரப்ப தொடங்கி விட்டனர். இதையடுத்து அடுத்த நாளே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனஸ்ரீ சஹால் என்ற பெயரிலிருந்து சஹால் என்ற பெயரை மட்டும் தனஸ்ரீ தனியாக நீக்கிவிட்டார். இதையும் உன்னிப்பாக கவனித்த ரசிகர்கள் ஷ்ரேயஸ் விஷயம் கசிந்து விட்டதாகவும், அதனால் சஹால் அவரை சந்தேகப்படுவதாகவும் இதனால் தனது பெயரை நீக்கியதாகவும் வதந்தி கிளப்பி வருகிறார்கள்.

 

தினேஷ் கார்த்திக்குடன் ஒப்பிட்டு உருட்டிய ரசிகர்கள் :

முன்னதாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திற்கு அவருடைய நண்பரான முரளி விஜய் துரோகம் செய்து அவரது மனைவியை தனது வசமாக்கியது அனைவரும் அறிந்ததே. இதனை சுட்டிக்காட்டி ரசிகர்கள் சஹால் 2ஆவது தினேஷ் கார்த்திக் என்று பேசி வருகின்றனர். இந்த நிலையில் தனது வாழ்வின் புதிய அத்தியாயம் துவங்கப் போகிறது என்று ஒரு மறைமுகமான பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஹால் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவு சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவியது என்றே சொல்லலாம். ஏனெனில்  ஷ்ரேயஸ் – தனஸ்ரீ ஆகிய இருவரின் தொடர்பை அறிந்து தினேஷ் கார்த்திக் போலவே விரைவில் சஹாலும் விவாகரத்து செய்வார் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கிட்டத்தட்ட 12 மணி நேரமாக தொடர்ந்து பதிவிட்டு ட்ரெண்ட் செய்தார்கள்.

 

https://twitter.com/sportstigerapp/status/1559851159875362816

 

 

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சஹால் : 

இதன் காரணமாக இந்த நிகழ்வு இந்திய அளவில் ட்ரெண்டான நிலையில், அதிர்ந்து போன சஹால் இவை அனைத்தும் வதந்தி என்றும், ரசிகர்கள் கூறுவது போல எதுவுமே கிடையாது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக பதிவிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.. அதில், எங்கள் உறவு தொடர்பான எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று உங்கள் அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள். அன்புடன், அனைவருக்கும் அன்பும் ஒளியும் அளியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/AkshatOM10/status/1560236685060890624

 

ஒரு ஜாலிக்காக ஒரு விளையாட்டு வீரரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இனிமேலாவது விளையாட்டுக்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பதை கிரிக்கெட் வீரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது..

 

Categories

Tech |