நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தில் தான் அவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றதோடு வசூலையும் குவித்துள்ளது. இதில் வானம் கிடுகிடுங்க என்று பாடலுக்காக நடனத்தை சாண்டி மாஸ்டர் இயக்கியிருந்தார்.
இந்த பாடல் உடைய ஒரு காட்சியில் கார்த்தி பல்டி செய்திருப்பார். இதுகுறித்து கார்த்தி தன்னுடைய twitter பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில், நடுராத்திரி மூணு மணிக்கு எல்லாம் சம்மர் சால்ட் அடிக்கவுட்டியே சாண்டி மாஸ்டர் மன்னிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.