Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற மனைவி…. 3 குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து தொழிலாளி தற்கொலை…. பெரும் சோக சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலத்தில் பி எச் காலனி பகுதியில் சமியுல்லா மற்றும் சஹேரா பானு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மோமின் என்ற 12 வயது குழந்தை, சைமா என்ற 10 வயது மகள் மற்றும் ஏழு வயதில் சுஹேல் என்ற மகனும் உள்ளனர். சமியுல்லா பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் துபாய்க்கு வேலை சென்ற சகோரா பானு, தனது சொந்த ஊருக்கு திரும்பி வர மறுத்துவிட்டார்.

அது மட்டுமல்லாமல் அவர் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இது பற்றிய புகைப்படங்களை தனது கணவருக்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார். துபாயில் இருந்து திரும்பி வரும்படி மனைவியிடம் கணவர் கூறியும் அவரது பிள்ளைகள் பலமுறை அனைத்தும் அவர் வரவில்லை.அதனால் தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷத்தை குடித்துவிட்டு சமியுல்லாவும் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.

அதில் சமியுல்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தைகள் மூன்று பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |