மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டும் இல்லாமல் பல்வேறு கலைகளுக்கு வாழ்விடமாகவும், பிறப்பிடமாகவும் அமைகிறது. இந்நிலையில் நமது மாவட்டத்தின் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் ஓவியம், திருப்புவனம் பட்டு, கருப்பூர் கலங்காரி ஓவியங்கள், நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம், தஞ்சாவூர் கலைத்திட்டுகள், நெட்டி வேலைப்பாடுகள், சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், நாச்சியார் கோவில் குத்துவிளக்கு என புவிசார் குறியீடு பெற்ற இந்த 10 பொருட்களும் சென்னையில் வருகின்ற 21-ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் இடம்பெறுகிறது.
இந்த கண்காட்சியின் மூலம் நமது மாவட்டத்தை சேர்ந்த கைவினை கலைஞர்களின் திறமை உலகம் முழுவதும் அறிய வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.