நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், ஜாதி வாரி கணக்கெடுப்பு வேணும் என நாம் தமிழர் கட்சியில் உள்ள இடும்பாவனம் கார்த்திக் சொல்லல, ஜாதி மலத்துக்கு சமம் என சொல்கிறார். நீங்கள் ஜாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் என சொல்லுறீங்களே என்ற கேள்விக்கு, அவரை ஏன் பேசுறீங்க ? கட்சியை வழிநடத்துபவன் நான், என்னுடைய கருத்து தான் கருத்து.
அவர் சொல்கிறார் என்றால்… அவரிடம் கேட்டால் எங்கள் அண்ணன் சொல்வது தான் சரி என்று சொல்வார்,நீங்கள் என்னிடம் தான் கேள்வி கேட்க வேண்டும். தனியார் மயப்படுத்தும் போது இட ஒதுக்கீடு இல்லை, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொடர் வண்டி போகும் போது இடஒதுக்கீடு எல்லாம் இல்லை. ஆனால் இருக்கிறது எனக்கு வரவேண்டும். அரசியல் அதிகாரத்தில் ,கட்சிகளுக்கு உள்ள வேலை எல்லாத்தையும் வரவேண்டும்.
தனியார் மயப்படுத்துவதில் இட ஒதுக்கீடு பயன் தராது. நீங்கள் கல்லூரிக்கு வேலைக்கு சென்றால் பழங்குடியா? பட்டியலினமா? பட்டியல் சமூகமா? ஒடுக்கப்பட்டவனா? பிற்படுத்தப்பட்டவனா? என்று கேட்க மாட்டார்கள். மதிப்பெண் எவ்வளவு ? பணம் எவ்வளவு ? என்று தான் கேட்பார்கள். அது அடுத்த போராட்டம்… ஆனால் இருப்பதில் எனக்கு என்ன பிரதிநிதித்துவம்? நீங்கள் 2008 புள்ளி விவர கணக்குபடி மத்திய அரசு பணியில்,
உயர் சாதி வகுப்பினர் 17.5, ஆனால் அவர்கள் பெற்ற இடம் ஒதுக்கீடு எவ்வளவு தெரியுமா 77.2. ஆனால் அவர்களுடைய மக்கள் தொகை விகிதத்தின் மேல 57.7 விழுக்காடு அவர்கள் பயன்படுகிறார்கள். சிக்கல் என்னவென்றால், நீண்ட காலமாக இந்த நிலத்தை ஆண்டவர்கள், இந்த நிலத்தின் பூர்வ குடிகள் அல்ல, அவர்களுக்கு இங்கு வேறு இல்லை. அவர்கள் எடுக்கும் போது, வந்தவர்கள், போனவர்கள் எல்லாம் இட ஒதுக்கீடு பெற்று அனுபவிக்கிறார்கள்.
இப்போது பட்டியலினம் இருக்கிறது. அதற்கு மத்திய அரசு ஒதுக்கிய கொடுத்த நிதி பயன்பாடுகள் அதிகம். ஆனால் எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது அட்டவணை டிஎம்டி-யை, டி.என்.சி ஆக ஆக்கிவிட்டார்கள். அதனால் மத்திய அரசு ஒதுக்குகின்ற நிதி குறைந்துவிட்டது. இதில் டி.என்.சியில் 63 குடிகள் இருக்கிறது. அதில் 5 குடிகள் தான் தமிழ் குடி இருக்கிறது. மீதி எல்லாம் யாரு? அந்த இட ஒதுக்கீட்டை அனுபவிப்பது யார்? என கேள்வி எழுப்பினார்.