Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில் நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்”…. எச்சரிக்கை விடுத்த துணை போலீஸ் சூப்பிரண்டு….!!!!!!

விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில் நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணிக்கு உட்பட்ட திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், திருத்தணி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் இது விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் துணை போலீஸ் இரண்டு தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, வருகின்ற 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கின்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தலின்படி விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தின் போது ரசாயன வண்ண கலவைகள் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக் கூடாது. களிமண்ணால் ஆன ரசாயன கலவை இல்லாத சிறிய அளவில் சிலைகளை வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். பொது இடத்தில் நிறுவப்படும் சிலைகள் ஐந்து நாட்களுக்குள் எடுத்துச் சென்று கரைக்க வேண்டும். சிலைகள் வைக்கப்படும் இடங்களில் எளிதில் தீப்பிடிக்காத வகையில் சிமெண்ட் சீட்டு, இரும்பு தகடு உள்ளிட்டவற்றால் மட்டுமே தற்காலிக பந்தல் அமைக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

Categories

Tech |