Categories
மாநில செய்திகள்

BREAKING : டி.என்.பி.எஸ்.சி முறைகேடு மேலும் ஒருவர் கைது …!!

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

TNPSC முறைகேடு தொடர்பாக இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் குரூப்-4 தேர்வில் 19 பேரும் , குரூப் 2-ஏ தேர்வில் 20 பேரும் , விஏஓ தேர்வில் 3 பேரும் என 42 பேர் கைதாகியுள்ள நிலையில் 43ஆவதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஓம்காந்தனை 5 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரித்த போது தனக்கு யாரெல்லாம் உதவி இருக்கிறார் என்ற பட்டியலை அவர் சிபிசிஐடி போலீஸாரிடம் தெரிவித்தன் தொடர்ச்சியாகத்தான் இந்த கைது படலம் அரங்கேறியுள்ளது.ஏற்கனவே அவருக்கு உதவிய 3 கார் ஓட்டுனர்களை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

இந்த நிலையில் தற்போது வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த மறியலிஜோஸ்மார் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.குரூப்  4 விடைத்தாள்களை ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு எடுத்து வந்தபோது ஓம் காந்தியின் உதவியாளர்  செயல்பட்ட மறியலிஜோஸ்மார் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கின்றார். இவர் தான் காரில் விடைத்தாள்களை மாற்றிக் கொண்டு செல்வதற்கு உதவியாக அவர் செயல்பட்டிருக்கிறார் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |