பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்”. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இத்திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமின்றி அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார். இந்த படம் ஜூலை 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் திரைப் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில் “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” படம் அதிக வசூல் ஈட்டியது.
இதற்கிடையில் ராக்கெட்ரி படத்தை எடுப்பதற்காக மாதவன் தன் வீட்டை விற்றார் என்ற தகவல் சமூகவலைதளத்தில் வைரலாகியது. இதற்கு விளக்கமளித்துள்ள மாதவன் “நான் என்னுடைய வீடு உள்ளிட்ட எதையும் இழக்கவில்லை. உண்மையில் ராக்கெட்ரி திரைப்படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் மிகவும் பெருமையுடன் இந்த வருடம் அதிக வருமான வரி செலுத்துவார்கள். கடவுள் அருளால் இந்த படத்தின் மூலம் அனைவருமே நல்லலாபம் ஈட்டினோம். நான் இன்னும் எனது வீட்டில் தான் வாழ்கிறேன்” என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Oh Yaar. Pls don’t over patronize my sacrifice. I did not lose my house or anything. In fact all involved in Rocketry will be very proudly paying heavy Income Tax this year. Gods grace 😃😃🙏🙏🇮🇳🇮🇳🇮🇳We all made very good and proud profits. I still love and live in my house .🚀❤️ https://t.co/5L0h4iBert
— Ranganathan Madhavan (@ActorMadhavan) August 17, 2022