தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன், எம்.எம் பாஸ்கர், வினோதினி வைத்தியநாதன், அழகம்பெருமாள் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த தொடரை ஏவிஎம் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த வெப் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் பட குழு பத்திரிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது அருண் விஜய் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது, தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸை பார்த்த பிறகு இனி யாருக்கும் பைரசி இணையதளத்தில் படம் பார்க்கக் கூடாது என்ற எண்ணம் வரும் என்றார். மேலும் சினிமா எடுப்பதில் எவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறது என்பதை இந்த வெப்சீரிசில் காண்பித்துள்ளோம் எனவும், சில கற்பனை காட்சிகளும் இடம் பெற்றுள்ளது எனவும் கூறினார்.