ஜிம்பாப்வேயில் கடந்த சில மாதங்களாக பரவி வரும் தட்டம்மை நோய்க்கு அந்த நாட்டின் 157 சிறுவர்கள் பலியாகி உள்ளனர். இது பற்றி அதிகாரிகள் பேசிய போது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் சிறுவர்களிடையே தட்டம்மை நோய் பரவி வருகின்றது. இதுவரை 2056 சிறுவர்களுக்கு அந்த தொற்று நோய் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் 157 சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றனர். மேலும் உயிரிழந்த சிறுவர்கள் அனைவருக்கும் தட்டம்மைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கவில்லை. மத நம்பிக்கைகள் காரணமாக பலர் தங்களது குழந்தைகளுக்கு தட்டம்மை போன்ற நோய்களுக்கு தடுப்பூசி செலுத்த மறுக்கிறார்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையே ஆறு மாதம் முதல் 15 வயதிற்கு உட்பட்டவருக்கு தடுப்பூசி செலுத்தும் மிகப்பெரிய திட்டத்தை மத தலைவர்களின் உதவியுடன் ஜிம்பாப்வே அரசு செயல்படுத்து தொடங்கி இருக்கிறது.
Categories
OMG: சிறுவர்களை விடாது துரத்தும் தட்டம்மை… ஜிம்பாப்வே அரசு அதிரடி நடவடிக்கை….!!
