கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பற்றிய மோட்டார்சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கலெக்டர் ஷ்ரவன்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இவற்றில் காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை போன்ற துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் மோட்டார்சைக்கிளில் போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட இந்த பேரணி நகரின் முக்கிய சாலைகள் வழியே ஏ.கே.டி. பள்ளியில் சென்று முடிவடைந்தது. மேலும் இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்லால், விஜய கார்த்திக் ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், கள்ளக்குறிச்சி துணைபோலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.