Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெருந்துறை நித்தியா ஈமு பார்ம்ஸ் நிறுவனம்… பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக பணம் வழங்கல்…!!!!!!!

பெருந்துறையில் 2012 ஆம் வருடம் நித்யா ஈமு பார்ம்ஸ் மற்றும் பவுல்டரி நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து 244 முதலீட்டாளர்களிடமிருந்து 2 கோடியே 44 லட்சம் முதலீடு பெற்றுள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியான பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து முதலீட்டாளர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீஸர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பான வழக்கு கோவை டான்பிட் கோர்ட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வழக்கு நடக்கும்போது 22 முதலீட்டாளர்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவன உரிமையாளர்களான முனியன் என்கிற முருகவேல் பாண்டியன் அவருடைய மனைவி மாரியம்மாள் என்கின்றவர்களுக்கு  பத்து வருடம் சிறை தண்டனை மற்றும் 2 கோடியே 44 லட்சம் அபராதம் விதித்து கடந்த பிப்ரவரி 11 ம் தேதி கோவை கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் அபராத தொகை நான்கு லட்சம் மட்டும் கோர்ட் வழக்கு செலவிற்காக வழங்க வேண்டும் எனவும் மீதமுள்ள 2 கோடியே  40 லட்சம் அபராத தொகையை முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே முனியன் மாரியம்மன் சென்னை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஜாமின் பெற்றுள்ளனர். இதில் ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி வங்கி கணக்கில் உள்ள நித்தியா ஈமு கோழி நிறுவனத்தின் ரூபாய் 39 லட்சம் முனியன் மாரியம்மாள் போன்றோரின் ஜாமின்போது செலுத்தப்பட்ட 10 லட்சம் முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படுகின்றது. அதன்படி நேற்று முன்தினம் 58 பேருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள முதலீட்டாளர்களில் ஒரு சாரருக்கு இன்றும் மற்றொரு சாரருக்கு வருகின்ற 23ஆம் தேதியும் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட இருக்கின்றது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக 10.70 % அடிப்படையில் பணம் பிரித்துக் கொடுக்கப்பட்டு வருகிறது என போலீசார் கூறியுள்ளனர்.

Categories

Tech |