செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சவுத் ஆசியன் பெடரேஷன் கேமை அம்மா நடத்தினார்கள், அப்போது நிறைய சொத்துக்களை அதன் நினைவாக உருவாக்கியது போல இப்போதும் திமுக அரசு செய்து இருக்கலாம். தற்போது திரு மு.கருணாநிதி அவர்களுடைய பேனா நினைவு சின்னம் கடலுக்குள் வைப்பதற்கு 80கோடி செலவுசெய்கிறார்கள்.
அதுபோல செஸ் போட்டிக்கென்று 100 கோடியில் பெரிய அளவில் ஆடிட்டோரியம் கட்டி இருந்தால் நல்லா இருந்திருக்கும். அதேபோல பெரிய ஸ்விம்மிங் கூல் கட்டி இருந்தால் நல்லா இருக்கும். அதே போல நிறைய நல்ல விஷயங்கள் விளையாட்டு என்று உருவாக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
80 கோடி ரூபாய் அதற்கு செலவு செய்வது என கொள்கை முடிவு எடுத்து அதில் குறியாக இருக்கிறீர்கள். சென்னையினுடைய அடையாளம் நம்முடைய மீனவர்கள், பழங்குடியினர். அவர்களுடைய அடையாளத்தை அழித்து அவர்கள் வாழ்வாதாரத்தை அழித்து, நீங்கள் கொண்டு வரலாம் என்று நினைக்கிறீர்கள்.
மீனவர்கள் இன்றைக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டார்கள், மற்ற அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து விட்டார்கள். சும்மா ஒரு விழா போட்டு அதில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதை விட அந்த விளையாட்டை வைத்து தமிழ்நாட்டை மேம்படுத்துவதற்கு திட்டம் கொண்டு வரவேண்டும் என்று தான் சொல்கிறோம் என தெரிவித்தார்.