Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி!… அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு அதிரடி….!!!!

சத்தீஸ்கர் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்கள் மே 2022 முதல் 7-வது ஊதியக்குழுவின் கீழ் 22 சதவீத அகவிலைப்படியும், 6-வது ஊதியக்குழுவின் கீழ் 174 சதவீத அகவிலைப்படியும் பெற்று வந்தனர். அதன்பின் வீட்டு வாடகைப்படி உயர்வு, அகவிலைப்படி உயர்வு ஆகிய பல கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் 5 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின் மீண்டுமாக ஆகஸ்ட் 22ம் தேதி மாநில அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு, அகவிலைப்படி உயர்வு வழங்க போராட்டம் நடத்தப்படுவதாக இருந்தது. இந்த நிலையில் 7வது ஊதியக்குழுவின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு 6 சதவீதம் முதல் 28 சதவீதம் வரையிலும், 6-வது ஊதியக்குழுவின் கீழ் இருப்பவர்களுக்கு 15 சதவீதம் முதல் 189 சதவீதம் வரையிலும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த அகவிலைப்படி உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் என்றும் சிறப்பு மற்றும் தனிப்பட்ட கொடுப்பனவுகளை உள்ளடக்காது என்றும் மாநில அரசின் நிதித்துறை அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி அதிகரிப்பால் கிட்டத்தட்ட 3.8 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ரூபாய்.2,160 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என மாநில அரசின் நிதித்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

Categories

Tech |