Categories
சென்னை மாநில செய்திகள்

மின்சார ரயிலில் ஆபத்தான பயணம்….. மாணவர்களுக்கே சவால் விடும் அரசு பள்ளி மாணவி…. அதிர்ச்சி வீடியோ….!!!!!

சென்னை மயிலாப்பூரில் இருந்து ஆவடி நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த மின்சார ரயிலில் அரசு பள்ளி மாணவி ஒருவர் ஏரி படிக்கட்டின் அருகில் நின்று கொண்டு பயணம் செய்தார். அதன் பிறகு ரயில் வேகமாக செல்லத் தொடங்கிய போது நடைமேடை முடியும் வரை காலை தரையில் தேய்த்தவாறு ஆபத்தான முறையில் மாணவி பயணம் செய்தார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்து வருவது வழக்கமாகிவிட்டது. அதனை தடுக்கும் நோக்கத்தில் அரசு கூடுதல் பேருந்துகளையும் இயக்கி வருகிறது. பொதுவாக மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தாங்க முடியாதது என்றால் அவர்களுக்கே சவால் விடும் விதமாக பள்ளி மாணவிகளும் ஆபத்தான பயணம் மேற்கொள்வது காண்போரை அதிர்ச்சி அடைய செய்கின்றது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

Categories

Tech |