ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி 701 பக்கம் கொண்ட அறிக்கையை தமிழக முதல் அமைச்சரிடம் கடந்த மாதம் 27-ந்தேதி தாக்கல் செய்தது. இந்த நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தமிழகத்தில் மட்டும் சுமார் 20 பேர் தற்கொலை செய்து பலியாகியுள்ளனர். இதனால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று முதல்வர் முக்கிய முடிவை எடுக்கவுள்ளார்.
Categories
ஆன்லைன் ரம்மிக்கு ஆப்பு…. இன்று முதல்வர் முக்கிய ஆலோசனை….!!!!
