அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்த பொதுக்குழு செல்லாது என அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வந்த தீர்ப்பால் எடப்பாடி தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும் அறிவித்த உயர்நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடம் வந்த ஓபிஎஸ்சிடம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியோடு சேர்ந்து பயணிப்பீர்களா ? என்ற கேள்விக்கு, தேவைப்பட்டால் கலந்து பேசிக்கு நல்ல முடிவு எடுப்போம். எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்கள் விருப்பபடியும், தமிழ்நாட்டு மக்களின் நலன்படி கருதி இருக்கும் என்று தெரிவித்த, ஓ.பன்னீர்செல்வம்., இனி எங்களுக்குள் அவங்க தரப்பு, இவங்க தரப்பு எதுவுமே கிடையாது. எல்லாமே இனி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் என்றும் தெரிவித்தார்.