இந்தியா – ஜிம்பாபே அணிகள் இன்று முதல் ஒருநாள் போட்டியில் மோதுகின்றது.
ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி.இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி கட்டத்தில் கே.எல் ராகுல் கேப்டன் ஆக செயல்பட வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்தது.. இந்த நிலையில் முதல் போட்டி ஹராரேயில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 12 : 45 மணிக்கு நடைபெறுகிறது.. இந்த இரண்டு அணிகளும் கடைசியாக மோதி கொண்ட 5 ஒரு நாள் போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பின் 2 அணிகளும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மோத உள்ளது.
காயம் காரணமாக கடந்த சில தொடர்களை விளையாடாமல் இருந்த கே எல் ராகுல் நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த போட்டியில் கேப்டனாக களம் இறங்குகிறார்.. ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.. இதில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவர் விக்கெட் கீப்பராக இருப்பார்கள் என்று தெரிகிறது.. காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் அணியிலிருந்து விலகி உள்ள நிலையில் அவருக்கு பதிலாக சபாஷ் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இளம் வீரர்கள் கொண்ட ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக வொயிட்வாஷ் செய்து வரலாற்று சாதனை படைத்தது இந்தியா. அந்த தொடரில் இடம் பெற்ற பெரும்பாலான இளம் வீரர்கள் இந்த தொடரிலும் விளையாடுகின்றனர். அவர்கள் நல்ல பார்மில் புத்துணர்ச்சியுடன் இருக்கின்றனர்.
இந்தியாவை விட ஜிம்பாப்வே பலத்தில் குறைவு என்பதால் அந்த அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் கடைசியாக நடந்த ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் ஜிம்பாப்வே அணி அதனுடைய சொந்த மண்ணில் வங்கதேசத்தை வீழ்த்தி 2 கோப்பையை வென்றது.. எனவே அந்த அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே இந்தியாவை வெல்ல ஜிம்பாப்வே போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணி வீரர்களும் போட்டியில் வெல்ல தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்..
ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்..
இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஜிம்பாப்வே அணி:
ரெஜிஸ் சகாப்வா (கேப்டன்), தனகா சிவாங்கா, பிராட்லி எவன்ஸ், லூக் ஜாங்வே, ரியான் பர்ல், இன்னசென்ட் கையா, கைடானோ டகுட்ஸ்வானாஷே, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே மருமணி, ஜான் மசாரா, டோனி முனியோங்கா, ரிச்சர்ட் ங்கராவா, விக்டர் நியுச்சி, சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, டொனால்ட் டிரிபானோ