ஆசிய கோப்பை போட்டியில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவார் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் விராட் கோலியை தெரியாதவர்களே கிடையாது. கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை வசமாக்கிய விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேட்டிங்கில் சொதப்பி வருவது அவரது ரசிகர்களுக்கு கவலை அடைய செய்துள்ளது. தொடர்ந்து பேட்டிங்கில் சறுக்கல்களை சந்தித்து வருகிறார் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் விளாசியுள்ள விராட் கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சதங்களை விளாசாமல் இருப்பது அவர் மீது விமர்சனங்களை எழ செய்கிறது. அது மட்டும் இல்லாமல் நடந்து முடிந்த பல தொடர்களில் அவரால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை. தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகிறார். இது அனைவரது மத்தியிலும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரில் விராட் இடம் பிடிப்பாரா? தேர்வு குழு அவரை தேர்வு செய்யுமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. காரணம் விராட் கோலியின் மோசமான பேட்டிங் ஃபார்ம் தான்.. நடந்து முடிந்த வெஸ்ட் இண்டிஸ் அணியுடன் டி20 கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடிய இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றுதொடரை கைப்பற்றியது.
இந்த தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டதால் விராட் கோலி டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பிடித்துள்ளார். கண்டிப்பாக இந்த தொடரில் அவர் சிறப்பாக ஆட வேண்டும் அப்படி ஆடினால் மட்டுமே டி20 உலகக்கோப்பையில் இடம்பிடிக்க முடியும்..
ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி பாகிஸ்தான அணியை எதிர்கொளிக்கிறது. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு முன்னாள் கேப்டன் விராட் கோலி உலகளாவிய போட்டிகளில் சதம் எதுவும் அடிக்கவில்லை.. அவருடைய பார்ம் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு மிக இன்றியமையாததாக பார்க்கப்படுகிறது. அண்மைக்காலமாக ரன் குவிக்க முடியாமல் மிகவும் தடுமாறி வரும் விராட் கோலியை முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.. இந்நிலையில் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு வருவார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.