சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதனை அடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக மதன், கோவிந்தராஜ், அப்பு, அஜித் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதே போல் சுங்கச்சாவடி அருகே பணம் வைத்து சூதாடிய சாதிக், பாபு, ஷாஜகான், முருகேஷ், பாருக், ரபீக் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள் மற்றும் 4 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.