Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் வைத்து விஷம் குடித்த பெண் உயிரிழப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கலெக்டர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி எழில் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தீபலட்சுமி(35) கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பண முதலீடு திட்டத்தில் சேர்ந்துள்ளார். அவருக்கு கமிஷன் தொகை வருமானமாக கிடைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீபலட்சுமி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தீபலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தீபலட்சுமி தனியார் நிறுவன முதலீடு திட்டத்தில் ஏராளமான வாடிக்கையாளர்களை சேர்த்து விட்டுள்ளார். ஆனால் வாடிக்கையாளர்களுக்கு கமிஷன் தொகை எதுவும் கிடைக்காததால் பணம் முதலீடு செய்தவர்கள் தீபலட்சுமியிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் கமிஷன் தொகையை கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த தனியார் நிறுவனத்தில் இருந்து தீபலட்சுமி மட்டுமே உரிய கமிஷன் தொகையை பெற்றுள்ளார். மற்ற யாருக்கும் கமிஷன் தொகை வழங்கப்படவில்லை. எனவே தீபலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணன், அவரது மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |