Categories
மாநில செய்திகள்

குறையும் மின் உற்பத்தி….. தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு அபாயம்?…..!!!!

இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகுக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை கோவை, திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 13,000 காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டம், ராதாபுரம் பகுதியில் காற்றின் வேகம் தற்போது குறைந்துள்ளது.

இதனால் காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு  ஏற்பட்டுள்ளது. சில காற்றாலைகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்த காற்றாலைகள் தற்போது 250 மட்டுமே செய்யப்பட்டு வருகின்றது. இதனால் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது.

Categories

Tech |