5 பேரின் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்த கொடூரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கடந்த 2020-ஆம் ஆண்டு சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 42 வயது தந்தை, 9 வார பச்சிளம் குழந்தை மற்றும் 3 பெண்கள் உட்பட 5 பேரின் மீது மது போதையில் இருந்த சாரதி என்பவர் வாகனத்தை ஏற்றினார். இந்த விபத்தில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதன் பிறகு பலர் விபத்தில் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சாரதிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததோடு, மனநல சிகிச்சையும் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.