Categories
சினிமா தமிழ் சினிமா

பேருந்தில் பயணம் செய்யும் பிரபல நடிகர்…. வைரலாகும் வீடியோ…!!!!!!

வலிமை படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகின்றார். ஏகே 61 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கின்றார். மேலும் சமுத்திரக்கனி, வீரா  பலர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித் பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் வீடியோவை ரசிகர் ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் அஜித் மக்களோடு மக்களாக பயணம் செய்து வருகின்றார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. அது மட்டுமல்லாமல் நடிகர் அஜித் ஏகே 61 படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து விசாகப்பட்டினம் சென்றிருப்பதாகவும் அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Categories

Tech |