Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீட்டில்…. சாலை விரிவாக்கப் பணிகள்… நடைபாதைகளை அகற்றும் பணி தீவிரம்…!!!

சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்றுள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல்வேறு சாலைகளில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோர்ட் ரோடு பகுதியில் உள்ள சாலையை இரு வழி சாலையாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக நடைபாதைகளை அகற்றும் பணி பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு இடிபாடுகளை அகற்றும் பணியும் நடைபெற்றது. இதேபோன்று பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையையும் விரிவாக்கம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |