Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடர்”…. வாஷிங்டன் சுந்தருக்கு பதில் களமிறங்கும் ஷாபாஸ் அகமது….!!!!

ஜிம்பாப்வேக்கு சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. முதலில் ஒரு நாள் போட்டி நாளை (பிற்பகல் 12:45 மணி) ஹராரேயில் நடைபெற இருக்கிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது. ஷிகர்தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் வாரியமானது தெரிவித்து இருக்கிறது.

இதனிடையில் அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தோளில் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகி இருக்கிறார். இந்தநிலையில் வாஷிங்டன் சுந்தருக்கு பதில் ஒரு நாள் தொடரில் ஷாபாஸ்அகமது சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்று பிசிசிஐ தெரிவித்து உள்ளது. பெங்காலை சேர்ந்த ஷாபாஸ் 18 முதல் தரபோட்டிகளில் விளையாடி 7 அரைசதங்கள் மற்றும் 1 சதத்துடன் 1041 ரன்கள் எடுத்திருக்கிறார். அத்துடன் 57 விக்கெட்டுகளையும் எடுத்து இருக்கிறார். இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஆடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |