தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று டெல்லி சென்று குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் என அடுத்தடுத்து முக்கிய சந்திப்பை நிகழ்த்த இருக்கின்றார். காலையில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் ஆகியோரை சந்தித்த முதல்வர் மாலையில் பிரதமருடன் நடைபெறும் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், நான் முதலமைச்சராக பொறுப்பேற்று இரண்டு, மூன்று முறை டெல்லிக்கு வந்திருந்து பிரதமரை சந்தித்து, தமிழ்நாட்டினுடைய பல்வேறு கோரிக்கைகளை எல்லாம் நான் எடுத்து வைத்திருக்கிறேன். அந்த கோரிக்கைகள் ஓரளவு நிறைவேற்றக்கூடிய சூழல் இருந்தாலும், இன்னும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில் இருக்கு.
ஆகவே அதையும் நினைவூட்டி, அந்த கோரிக்கையை நேரடியாக சந்திக்கின்ற போது நான் எடுத்து வைக்க இருக்கின்றேன்.பிரதமர் மோரிடம் ஏற்கனவே சொன்ன நீட்டு பிரச்சனை, புதிய கல்விக் கொள்கை, புதிய மின்சார சட்டம், காவேரி மற்றும் மேகதாது போன்ற பல கோரிக்கைகளை தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறோம். அதை மீண்டும் நினைவுபடுத்தப் போகின்றோம்.
ஏற்கனவே இருந்த ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை வைத்தோம். அதேபோல பிரதமரிடத்திலும் வச்சிருக்கோம். அதைத்தான் திரும்பியும் வைக்க போறோம் என பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து பேசினார்.