பணவீக்கம் வேகமாக அதிகரித்து வந்ததால், சமீபத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விதத்தை அதிகரித்து இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, வட்டியில் மானியம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ஆகவே வட்டி எவ்வளவோ அதில் 1.5 சதவீதம் குறைவான வட்டியிலே விவசாயிகளுக்கு கடன் கிடைக்கும். 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுவோருக்கு கிடைக்கும் என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
விவசாயிகள் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினால் அவர்களுக்கு மற்றவர்களுக்கு கிடைப்பதை விட 1.5% வரை வட்டி குறைவாக கிடைக்கும். இதற்காக இந்த நிதி ஆண்டிலேயே 34, 856 கோடி ரூபாய் மானியத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் இந்த வசதி மீனவர்களுக்கு, கால்நடை விவசாயிகளுக்கும் கிட்டும். ஏனென்றால் இவர்களுக்கும் விவசாயிகளுக்கு சலுகைகள் கிடைக்கக்கூடிய கிஷான் காஸ் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளார்கள். எனவே விவசாயிகளுக்கு வட்டி உயர்வால் பாதிப்பு ஏற்படக்கூடாது என இந்த மானியத்தை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.