Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு… பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா…!!!!!!!

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ஆலத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பத்தாவது வார்டு பகுதியைச் சேர்ந்த பள்ளத்தூர் பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று பகல் 11 மணியளவில் ஏலத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பேரூராட்சி செயல் அலுவலர் காவிரி செல்வன் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார்.

அதன் பின் அதிகாரிகளிடம் பொதுமக்கள் பேசும்போது பள்ளத்தூர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். இந்த பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான 6 சென்ட்   இடத்தை ஒருவர் ஆக்கிரமித்து இருக்கின்றார். இந்த நிலத்தை மீட்க கோரி நாங்கள் பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்து இருக்கிறோம். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் நம்பியூர் தாசில்தார் கௌசல்யா கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவரை காலி செய்ய கடிதம் மூலமாக உத்தரவு பிறப்பித்ததாக கூறியுள்ளார்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் கோவில் நிலத்தை மீட்டு தர கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம் என தெரிவித்துள்ளனர். அதற்கு செயல் அலுவலர் பேசும்போது இது சம்பந்தமாக தாசில்தார் மற்றும் உயர் அலுவலர்களிடம் பேசி இருக்கின்றோம். மேலும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |