Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: EPSயை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது இரத்து – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு …!!

கடந்த மாதம் 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு கடந்த 10 மற்றும் 11ஆம் தேதி விசாரணை நடத்தபோது முதற்கட்டமாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.

ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. அதனால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருப்பதாக தான் கருத முடியும். அந்த பதவி காலியானதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூறுவது ஏற்க முடியாது என்றும், இந்த பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது 15 நாட்களுக்கு முன்பு முறையாக நோட்டீஸ் அனுப்பவில்லை.

ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன்  தேர்ந்தெடுத்தது, அவர் மூதரமாக அழைப்பு வெளியிட்டதும், அது  ஊடகங்கள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்வது ஏற்புடையதில்லை என ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும்,  வைரமுத்து தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைப்பில் வைக்கப்பட்ட வாதங்களில் ஜூலை 23ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான தீர்மானம் நிராகரிக்கப்பட்டு இருப்பதன் அடிப்படையில் இரண்டு பதவிகளும் காலியானதாக கருதி அதற்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய தலைமை நிலைய செயலாளர் என்ற முறையில் தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும்,

அவர்கள் மூலமாகத்தான் பொதுக்குழு தொடர்பான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்படுத்தப்பட்டது.எனவே பொது குழுவை எதிர்த்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதங்களும் முன் வைக்கப்பட்டிருந்தன.

இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொதுக்குழு கூட்டப்பட்டதில் சரியான நடைமுறையை பின்பற்றப்பட்டு இருக்கிறதா ? என்பதை ஆராய்வதாகவும்,  அதன் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை வாசித்த நீதிபதி, அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என  அறிவித்தார்.

மேலும்,  ஜூன் 23ஆம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒப்புதல் கொடுக்கப்பட்டு நடைபெற்ற பொதுக்குழு  அப்படிங்கற நிலைப்பாட்டில் தான் அப்படியே இருக்க வேண்டும். புதிய  செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அப்படிங்கிறது நடத்தக்கூடாது. அப்படின்னும் நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இந்த உத்தரவை நீதிபதி  ஜெயச்சந்திரன் பிறப்பித்து இருக்கிறார்.  எடப்பாடி பொது செயலாளராக தேர்வு செய்தது ரத்து. புதிய பொது குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |