Categories
தேசிய செய்திகள்

சூப்பர் வாசுகி சரக்கு ரயில் சோதனை இயக்கம்…. 27,000 டன் நிலக்கரியுடன் பயணம்….!!!!!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் இருந்து மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு 295 சரக்கு பெட்டிகள் 27 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு இந்த ரயில் சாதனை பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ரயிலில்  ஆறு எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் முதலிலும் இறுதியிலும் இரு என்ஜின்களும் குறிப்பிட்ட இடைவெளிகளில் இடை இடையே மேலும் 4 என்ஜின்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சூப்பர் வாசுகி ரயிலின் சோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டது என்று தென் கிழக்கு மத்திய ரயில்வே கூறியுள்ளது. கோர்பா, நாகபுரி இடையேயான 267 கிலோமீட்டர் தொலைவில் 11 20 மணி நேரத்தில் இந்த ரயில் கடந்துள்ளது.

ஒரே பயணத்தில் சுமார் 9000 டன் நிலக்கரியை எடுத்துச் செல்லும் சரக்கு ரயில்கள்தான் தற்போது இருக்கின்றது. சூப்பர் வாசுகி ரயிலின் மூலமாக மூன்று மடங்கு அதிக நிலக்கரியில் எடுத்துச் செல்ல முடியும். மேலும் 3000 மெகாவாட்  திறன் கொண்ட மின் உற்பத்தி ஆலைக்கு ஒரு நாள் முழுக்க தேவையான நிலக்கரியை இந்த ரயிலின் ஒரு பயணத்தின் மூலமாக பூர்த்தி செய்து விடலாம். இந்த நிலையில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவும் காலகட்டங்களில் சூப்பர் வாசுகி ரயிலே பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாட்டில் இந்த வருடம் தொடக்கத்தில் மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |