மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஓய்வூதியர்கள் முழு பலன் கிடைக்கும் விதமாக நடைமுறைப்படுத்தி சந்தா தொகையை ரூபாய் 350 ஆக குறைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பலராமன் தலைமை தாங்கியுள்ளார். செயலாளர் சிங்காரவேலு முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி உள்ளனர்.
Categories
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!
