Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பணிக்கான இடமாறுதல் கலந்தாய்வு?…. தமிழகத்தில் வெளியான புதிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை மாதம் நடத்தப்படும் என பள்ளி கல்வி ஆணையர் அறிவித்தார்.முதலில் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்திவிட்டு அதன் பிறகு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மேலும் நகராட்சி உயர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை பதவி உயர்வு மூலமாக நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நடைமுறைகள் சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு எத்தனை மாதம் ஆகியும் கலந்தாய்வு குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

அதுமட்டுமல்லாமல் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் இடம் மாறுதல் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி அன்று விசாரணைக்கு வந்து தற்போது மீண்டும் ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்று ஆசிரியர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |