Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. மின்விநியோகம் குறித்து ஏதாவது புகாரா?…. முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மின்சார விநியோகம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை அண்ணா சாலையில் இருக்கின்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நுகர்வோர் சுவாமிநாதன் என்பவருடன் கைபேசி மூலமாக முதல்வர் தொடர்பு கொண்டு அவரின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மின்னக சேவை மையத்தில் 9498794987 என்ற எண்ணில் பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம்.

மின்விநியோகத்தில் தடை, விகித பட்டியல் மாற்றம்,மின் கட்டணத்தில் உள்ள சந்தேகங்கள் உள்ளிட்ட அனைத்துவித புகார்களையும் அழிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் அல்லது சட்டப்பேரவை உறுப்பினர்களை தொடர்பு கொண்டே பொதுமக்களின் தேவை குறைகளை கேட்டறிந்து உடனடியாக சரி செய்வதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |