Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இனி இதற்கெல்லாம் ஆதார் கட்டாயம்: அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய குடிமக்களுக்கு ஆதார் என்பது அவசியமான ஒன்றாகவும், அடையாள ஆவணமாகவும் இருக்கிறது. குழந்தைகளுக்காக ஆதார் வாங்குவதற்காக பால் ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆதார் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டையை ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் அப்டேட் செய்யும் வசதியை UDAI அமைப்பு வழங்குகிறது.

இந்த நிலையில்  அரசு மானியங்கள் மற்றும் சலுகைகள் பெற இனி ஆதார் எண் அல்லது ஆதார் பதிவு எண்கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையமான ‘யுஐடிஏஐ’ அறிவித்துள்ளது. நிரந்தர ஆதார் எண் இல்லாதவர்கள், ஆதார் பதிவு அடையாள எண்ணைக் கொண்டு அரசின் சலுகைகள் மற்றும் மானியங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது

Categories

Tech |