Categories
தேசிய செய்திகள்

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்பும் வேலை வாய்ப்புகளும்… முழு விவரம் இதோ….!!!!!

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த கல்வியாண்டு 2022 – 23 முதல் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பாடத்திற்கான பட்டம் மற்றும் பட்டய படிப்பிற்கான கல்லூரி தொடங்கப்படுகின்றது. பட்டம் மற்றும் பட்டைய படிப்பு விவரங்கள் பின்வருமாறு, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டதாரிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு வேலை வாய்ப்புகள் தற்போது அதிகமாக இருக்கிறது. தனியார் துறைகளிலும் இவர்களின் பணி அதிகமாக தேவைப்படுகின்றது. அதிலும் குறிப்பாக பின்வரும் நிறுவனங்களுக்கு இத்தகைய பட்டதாரிகளின் பணி மிகவும் அவசியமாகின்றது.

அதாவது கரிமுக உற்பத்தி, வேளாண்மை துறை, உணவை பதப்படுத்துதல், உணவு பொருட்களை சந்தைப்படுத்துவது, உற்பத்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான திட்டங்களை செயல்படுத்துவது, வேளாண் பொருட்களையும் உணவு பொருட்களையும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்களுடன் பணியாற்றுவது விவசாயத் துறைக்கு தேவைப்படும் உரம் பூச்சிக் கொல்லிகள் போன்றவற்றை உற்பத்தி செய்வது சந்தைப்படுத்துவது மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் இவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக காத்திருக்கின்றது. பெருகிவரும் மக்கள் தொகையின் காரணமாக வேளாண் பொருட்களின் தேவை அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக வேளாண் துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவர்கள் சுய தொழில் தொடங்குவதற்கும் வேளாண் நிறுவனங்களில் வேலையில் சேர்வதற்கும் தகுதியுள்ளவர்களாக இருக்கின்றார்கள்.

கல்லூரி சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கிறது முனைவர் பட்டம் பெற்ற அனுபவமுள்ள மிக சிறந்த பேராசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றது. மேலும் மிகப்பெரிய நூலகம் இருக்கிறது நவீன ஆய்வகங்கள் வைஃபை வசதியுடன் கூடிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனி விடுதி வேளாண் மற்றும் தோட்டக்கலைக்கான பயிற்சி பண்ணைகள் இருக்கின்றது. வேலை வாய்ப்பு மற்றும் போட்டி தேர்வுகளுக்கான டிஎன்பிஎஸ்சி, ஐ சி ஏ ஆர், சிவில் சர்வீஸ், பேங் பயிற்சி மற்றும் ஆலோசனை மையம் இருக்கின்றது. இந்த நிலையில் பட்டம் மற்றும் பட்டய படிப்பில் சேர்வதற்கு மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் பாடப்பிரிவுகளாவது கணிதம், இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் அல்லது இயற்பியல், வேதியல், தாவரவியல், மற்றும் விலங்கியல் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணினி தொழில்நுட்பம், உயிர்நுட்பவியல், உயிர் வேதியல், வேளாண்மை சுற்றுப்புறவியல், இவற்றில் ஏதாவது ஒன்று பயின்றிருக்க  வேண்டும்

Categories

Tech |