Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த மனுஷனுக்கு பயமே இல்லை… ”ரைடு” அப்படினா என்ன ? டக்குனு வீட்டுக்கு கூப்பிட்ட ஜெயக்குமார்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ரைடு ரைடு என சொன்னாங்க அல்லவா ? எனக்கு தெரிந்த ரைடு என்றால் சைக்கிள் ரைடு, அதற்குப்பின் பைக் ரைடு, அதற்குப் பிறகு ஹார்ஸ்  ரைடு, எலிபன்ட் ரைடு இதுதான் நான் கேள்விப்பட்டது. அதனால் ரைடு என்று சொல்லி பரப்பி விட்ட என்னுடைய எதிரிகளுக்கு  அற்ப சந்தோஷம் அடைந்தார்கள். ஆனால் சைக்கிள் ரைடு தான் எனக்கு தெரிந்ததே ஒழிய, வேற எந்த ரைடு பத்தியும் எனக்கு தெரியாது.

லஞ்ச ஒழிப்புத்துறை தாராளமாக வீட்டுக்கு வரட்டும். வந்து வீட்டை நல்லா துடைத்து விட்டு போகட்டும், ஆங்காங்கே பேப்பர் குப்பையாக கிடைக்கிறது. எனக்கு அடுக்குவதற்கு நேரமில்லை, அவர்கள் வந்து நன்றாக அடிக்கி வைத்து, சுத்தப்படுத்திவிட்டு போனால் நல்லது.

திமுகவும் சரி, திமுகவின் ஏவல் துறையாக இருக்கின்ற காவல் துறையும் சரி, இரண்டாவது வந்து நம்முடைய அரசியல் எதிரிகள் அமமுக, சமீபத்தில் இருந்து,  இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்து,  பிரிந்து போய்,  நாம் ஒருவர், நமக்கு ஒருவர் என்று இருக்கின்ற ஓபிஎஸ் தரப்பும் சரி…..  இவர்கள் எல்லாம் சேர்ந்துதான்… இது போன்ற கட்டுக்கதையை எல்லாம் பரப்பி விடுகிறார்கள்.

மடியில் கணம் இருப்பவர்களுக்கு தான் பயம். மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் என்பது கிடையாது. என் வாழ்க்கையில் பயம் என்பது இல்லாத ஒன்று என தெரிவித்தார்.

Categories

Tech |