அமமுகவின் பொதுக்குழுவில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இங்கே உக்கார்ந்து இருக்கும் போது பார்த்தேன். எத்தனையோ இஸ்லாமிய நண்பர்கள் பொதுக்குழு உறுப்பினர்களாக, மாவட்ட செயலாளராக, தலைமை கழக நிர்வாகிகளாக இங்கே வந்திருக்கிறார்கள். அதே போல கிறிஸ்துவ சகோதரர்கள், எல்லா மதங்களிலும் சங்கமம் இது, எல்லா சமுதாயத்தை சேர்ந்தவர்களும் இங்கே பொறுப்பில் இருக்கிறார்கள்,
மேடையிலே அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் எல்லாம் புரட்சித்தலைவி அம்மாவின் தொண்டர்கள், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் தொண்டர்கள்.. இதைத் தவிர வேறு எந்த பாகுபாடும் நம்மிடம் கிடையாது. ஆனால் அம்மா அவர்கள் நடத்திய இயக்கம் கட்டி காத்த இயக்கம், புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்ட இயக்கம் இன்றைக்கு எப்படி எல்லாம் அல்லல் படுகிறது என்பது என்னும்போது, உண்மையிலேயே வருத்தமாகத்தான் இருக்கிறது.
என்னிடம் கூட இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கேட்டார்கள்… அண்ணா திமுக இவ்வளவு சங்கடங்களை சந்தித்து வருகிறது. அதை பார்த்தால் வருத்தமாக ? இல்லையா? உண்மையாகவே நான் மனம் திறந்து சொல்கிறேன். உண்மையிலேயே எனக்கு வருத்தமாக தான் இருக்கிறது. ஏனென்றால், அந்த இயக்கம் ஒரு அக்மார்க் சுயநலவாதிகளிடம் மாட்டிக்கொண்டு விட்டது.
ஒரு மனிதனிடம் எந்த குணமெல்லாம் இருக்கக் கூடாதோ… பதவி ஆசை இருக்கலாம், ஆனால் பதவி வெறி, சுயநலம், ராஜதந்திரம் என்ற பெயரில் எல்லோரையும், எனக்கு முன்னால் பேசியவர் சொன்னது போல…. தேர்தல் நேரத்தில் வாக்குக்கு பணம் கொடுக்கின்ற கலாச்சாரம் வந்துவிட்டது. சொந்த கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களையே, மாவட்ட செயலாளர்களையே காசு கொடுத்து வசப்படுத்த வேண்டிய கேவலமான நிலை அவர்களுக்கு வந்து விட்டது என தெரிவித்தார்.