Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த தந்தை…. என்ன காரணம்….? பெரம்பலூரில் பரபரப்பு….!!!!

குடும்பத் தகராறில் தந்தை-மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை அருகே காட்டுக்கொட்டாய் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும், பிரகதீஸ்வரன் (4) மற்றும் யோகேஸ்வரன் (9) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து நேற்றும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால், பாஸ்கர் தன்னுடைய 2-வது மகன் பிரகதீஸ்வரனுடன் வீட்டை விட்டு வெளியேறி அருகில் இருந்த ஒரு விவசாய கிணற்றில் திடீரென குதித்து விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பூங்கொடி அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

ஆனால் கிராம மக்களால் பாஸ்கர் மற்றும் அவருடைய மகனை மீட்க முடியாததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் கிணற்றுக்குள் இறங்கி பாஸ்கர் மற்றும் பிரகதீஸ்வரனின் பிணத்தை மீட்டனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த 2 பேரின் சடலத்தையும் மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |