Categories
மாநில செய்திகள்

எதிர்மனுதாரர்களாக புதிய மனுவை தாக்கல் செய்யுங்கள்….. இந்து முன்னேற்றக் கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு….!!!!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னேற்றக் கழகத்தின் தலைவரான வழக்கறிஞர் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் விநாயகர் சதுர்த்தியின் போது பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு, பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படுவதாக குறிப்பிட்டு இருந்தார். அதன் பிறகு பிற வழிபாட்டு தளங்களுக்கு அருகில் அனுமதி இன்றி விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் அமைக்கப்படுவது மற்றும் நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பாக எந்த ஒரு முறையான விதிகளும் வகுக்கப்படவில்லை எனவும், இந்து அமைப்புகள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நன்கொடைகள் வசூலிப்பதை கண்காணிக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தியின் போது அனைத்து மாவட்டங்களிலும் குறைந்த அளவிலான விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் நன்கொடை வசூலிப்பது யார் என்று மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் இந்து அமைப்பினர் என்று கூறினார். இதன் காரணமாக மனுதாரர் தாக்கல் செய்த மனுவை எதிர் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் இந்து முன்னேற்ற கழகத்துக்கு உத்தரவிட்டதோடு, வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

Categories

Tech |