Categories
உலக செய்திகள்

விபத்தில் சிக்கிய பள்ளி பேருந்து… தூக்கி வீசப்பட்ட குழந்தைகள்… அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்திற்குள் குழந்தைகள் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சில குழந்தைகள் தங்களுக்குரிய பள்ளி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பள்ளி வாகனத்திற்கு குறுக்கே கார் ஒன்று வந்தது. இதனால் நிலைதடுமாறிய பள்ளி பேருந்தும், காரும் மோதிக் கொண்டன. இதில் பேருந்தில் இருந்த குழந்தைகள் அங்கும் இங்குமாக சிதறி விழுந்தனர்.

Image result for Shocking video of children thrown into school bus crash in US

அடுத்த சில நொடிகளிலேயே கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து அருகில் இருந்த ஒரு பெரிய பள்ளத்தில் வேகமாக ஏறி இறங்கியது. அப்போது தான் பேருந்தினுள் இருந்த குழந்தைகள் எல்லோரும் பேருந்தின் மேற்கூரை வரை தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். இந்த அதிர்ச்சி நிகழ்வுகள் பேருந்தினுள் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

நல்ல வேலையாக இந்த விபத்தில் எந்த குழந்தைகளும் உயிரிழக்கவில்லை. இதில் சில குழந்தைகளும், பேருந்து ஓட்டுநரும் காயமடைந்தனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ 

Categories

Tech |